கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2020 11:55 PM GMT (Updated: 16 Sep 2020 11:55 PM GMT)

புதுக்கோட்டை மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட சி.ஐ.டி.யூ.வின் உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி, ஒப்பந்த சுய உதவிக்குழு, தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.600 வழங்க வேண்டும். மாதம் ரூ.250 ஊதியம் பெறும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். கணினியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதித்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சிகளில் பணியாற்றும் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள், சி.ஐ.டி.யூ.வினர் கலந்து கொண்டனர்.

Next Story