உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2020 12:28 AM GMT (Updated: 17 Sep 2020 12:28 AM GMT)

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடந்த 16.3.2020 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தபடி ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு சம்பளம் ரூ.4 ஆயிரம் மற்றும் இதர படிகள் தூய்மை காவலர்களுக்கு சம்பளம் ரூ.3500 வழங்கிடும் அரசாணையை உடனடியாக வெளியிடவேண்டும், ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து ஓ.எச்.டி. ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பரிசோதனை செய்திட வேண்டும், நோய் தொற்று கண்டறிய பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், சம்பளத்துடன் விடுப்பு அரசாணை பதிவேட்டின் படி ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும், சிகிச்சை பலனின்றி இறந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் உதவித்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் தூய்மை பணியாளர் தூய்மை காவலர் அனைவருக்கும் முக கவசம், கையுறை கிருமி நாசினி உள்ளிட்டவை முறையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story