மாவட்ட செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு ஓடிய தனியார் பஸ்கள் + "||" + Private buses running after 77 days in delta districts

டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு ஓடிய தனியார் பஸ்கள்

டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு ஓடிய தனியார் பஸ்கள்
டெல்டா மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் ஓடின.
தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையொட்டி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் மாவட்டத்திற்குள் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. 7-ந் தேதி முதல் மாவட்டம் விட்டு பிற மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள், விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுவும் 50 சதவீத பஸ்களே இயக்கப்படுகின்றன. தஞ்சையில் இருந்து சென்னைக்கு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


அதே நேரத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. முழு இருக்கைகளையும் நிரப்ப அனுமதிக்க வேண்டும். பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு மாதத்திற்கான வரியை செலுத்தினால் போதும் எனவும், 60 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க வேண்டும் எனவும் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இயக்கம்

இதையடுத்து தமிழகம் முழுவதும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சமூக இடைவெளியுடன் 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன. முக கவசம் அணியாதவர்களை பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 325 தனியார் பஸ்கள் உள்ளன. இவற்றில் 80 பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயககப்பட்டன. மீதமுள்ள பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

77 நாட்களுக்கு பிறகு

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க மாநில பொருளாளர் பி.எல்.ஏ.சிதம்பரம் கூறும்போது, நாளை (அதாவது இன்று) 75 சதவீத பஸ்கள் இயக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் பெற வேண்டிய நிலை இருப்பதால் அடுத்த மாதம்(அக்டோபர்) முதல் அனைத்து தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்றார்.

ஜூலை 1-ந் தேதி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது 77 நாட்களுக்கு பிறகு தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு பஸ்களுடன் கூடுதலாக தனியார் பஸ்கள் இயக்கப்படுவதால் பொதுமக்களும் மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் அதிகாலை முதல் ஓட தொடங்கின பயணிகள் மகிழ்ச்சி
6 மாதங்களுக்கு பிறகு ஆம்னி பஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை முதல் ஓட தொடங்கின. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
2. வெளியூர் மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்காக காரைக்கால் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்கள் பி.ஆர்.டி.சி. சார்பில் இயக்கப்பட்டன
காரைக்காலில் இருந்து நீட் தேர்வுக்காக புதுச்சேரி மற்றும் வெளியூர் களுக்கு சென்ற மாணவர்கள், பெற்றோர் களுக்கு அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி) சார்பில் 14 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
3. புதுச்சேரி எல்லை வரை வந்த தமிழக அரசு பஸ்கள்
புதுச்சேரி எல்லைப் பகுதிகள் வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
4. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கலாம்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற அரசு சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரத்து 380 வரை வசூலிக்கலாம்.
5. கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் தனியார் ஆஸ்பத்திரிகளில் பறக்கும் படை சோதனை மந்திரி தகவல்
கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க தனியார் ஆஸ்பத்திரிகளில் பறக்கும் படை சோதனை நடத்தும் என்று மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.