பரமத்திவேலூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பரமத்திவேலூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2020 8:27 AM IST (Updated: 17 Sept 2020 8:27 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்,

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐ.என்.டி.யு.சி. திட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர்கள் தண்டபாணி, கணேசன், கோட்ட தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய தொழிலாளர் மற்றும் பொறியாளர் ஐக்கிய சங்க மாநில செயலாளர் சரவணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் நிரப்ப வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது. துணை மின்நிலையங்களை தனியாருக்கு ஏலம் விடக்கூடாது. மானிய விலையில் வழங்கும் மின்சாரத்தை முடக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் கோட்ட செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story