மாவட்ட செய்திகள்

சேலம் செவ்வாய்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் + "||" + Debate with public opposition officials over the sewerage project at Salem Mars

சேலம் செவ்வாய்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

சேலம் செவ்வாய்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
சேலம் செவ்வாய்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்கு குழிகள் தோண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,

சேலம் மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அப்புச்செட்டி தெரு, சின்ன எழுத்துக்காரர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.


இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் மூடப்படாமல் இருந்த குழியில் முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில், செவ்வாய்பேட்டை பெரிய எழுத்துக்காரர் தெருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக சாலையில் குழிகள் தோண்ட மாநகராட்சி பணியாளர்கள் நேற்று முயற்சி மேற்கொண்டனர். இதற்காக பொக்லைன் எந்திரங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.

அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், சாக்கடை திட்டப்பணிக்கு குழிகள் தோண்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகளை மூடி சரி செய்து விட்டு இந்த பகுதியில் குழி தோண்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

மேலும் இதுபோன்ற பணிக்காக தோண்டப்படும் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதற்கான செலவுத்தொகையை பொதுமக்களிடையே வசூலிப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் மற்றும் போலீசார் பொதுமக்களிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பழைய குழிகளை மூடி சரி செய்து போக்குவரத்திற்கு வழி வகை செய்த பின்னர் புதிய பணிகளை தொடங்குவதாக மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை
காரைக்காலில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர்.
2. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டை அகற்றும் நடவடிக்கை தளவாய்சுந்தரம், அதிகாரிகளுடன் ஆலோசனை
தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டை அகற்றும் நடவடிக்கை குறித்து தளவாய் சுந்தரம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
3. திருவேற்காட்டில் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
திருவேற்காட்டில் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர், அமைச்சர் சென்ற பிறகு கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஏற்பாடு சபாநாயகர், விதானசவுதாவில் ஆய்வு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் ஏற்பாடுகள் குறித்து பெங்களூரு விதானசவுதாவில் நேற்று சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி ஆய்வு நடத்தினார். மந்திரி மற்றும் தலைமை செயலாளர், சட்டசபை செயலாளருடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
5. நாகர்கோவில் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்; பரபரப்பு
நாகர்கோவில் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.