மாவட்ட செய்திகள்

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு எதிர்ப்பது வேடிக்கையானது - எச்.ராஜா பேச்சு + "||" + DMK-Congress alliance needs selection It is fun to come up with and resist - H.Raja speech

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு எதிர்ப்பது வேடிக்கையானது - எச்.ராஜா பேச்சு

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி நீட் தேர்வை கொண்டு வந்துவிட்டு எதிர்ப்பது வேடிக்கையானது - எச்.ராஜா பேச்சு
நீட் தேர்வை தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு இருக்கும் போது கொண்டு வந்து விட்டு தற்போது அதை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேசினார்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம், பட்டமங்கலம், நடுவிக்கோட்டை, கொங்கரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தேசிய செயற்குழு உறுப்பினர் விசுவநாதகோபால் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாதார அணி செயலாளர் ஓம்பிரகாஷ் வரவேற்றார். வக்கீல் முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பேசியதாவது:- கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் எவ்வித உற்பத்தி இல்லாத நிலையிலும்கூட மத்திய அரசின் சார்பில் இந்திய மக்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரேஷன் கடையில் நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்க உத்தரவிட்டு அதன்படி அதை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்று தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதன் முதலில் கொரோனாவிற்கு இந்தியா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவை தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது நீட் தேர்வு குறித்து தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகின்றனர். முதலில் இந்த நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான். அப்போது ஏன் தி.மு.க. தடுக்கவில்லை. அதற்கு காரணம் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஆகியோர் மீது இருந்த 2ஜி வழக்கு. இன்னும் 2 மாதங்களில் கனிமொழியும், ஆ.ராசாவும் மீண்டும் டெல்லி உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பிற்குபின் திகார் ஜெயிலுக்கு போவது உறுதி. அப்போது நியாயம் ஜெயிக்கும்.

தமிழகத்தில் மாணவ-மாணவிகள் நீட் தேர்விற்கு எதிராக தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். இதற்கு நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க.வினர்-காங்கிரஸ் கட்சியினர் தான் தற்கொலை செய்ய வேண்டும். தற்போது சினிமாத்துறையை சேர்ந்த நடிகர்கள் நீட் தேர்வு குறித்து கல்வி முறையில் ஏற்ற தாழ்வு உள்ளதாக கூறி வருகின்றனர். உங்களது சினிமாத்துறையில் நீங்கள் வாங்கும் சம்பளம் போன்று மற்ற நடிகர்களும் வாங்குகிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்டவகளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கொண்டு வந்துவிட்டு தற்போது அதை எதிர்த்து போராடுவது வேடிக்கையானது. தமிழகத்தில் கிசான் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் கழுத்தில் குற்றவாளி என்ற பதாகை தொங்க விட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். முடிவில் ஒன்றிய தலைவர் குமரப்பன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்
விவசாயிகளின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தினார்.
2. “பா.ஜ.க. டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான்” எச்.ராஜா சொல்கிறார்
“பா.ஜ.க. டெல்லிக்கு மட்டும் ராஜா அல்ல. தமிழகத்திலும் ராஜாதான்” என்று மதுரையில் அளித்த பேட்டியில் எச்.ராஜா கூறினார். பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. “அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” எச்.ராஜா பேட்டி
“அமைச்சர்கள் எல்லை மீறி பேசுகிறார்கள்” என்று எச்.ராஜா கூறினார்.
4. எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
5. விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட மாட்டாது ; எச்.ராஜா உறுதி
மின்துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது. அதை மத்திய அரசு அனுமதிக்காது என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.