மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை: தூத்துக்குடி கடற்கரை வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை: தூத்துக்குடி கடற்கரை வெறிச்சோடியது - பாதுகாப்பு பணியை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 18 Sept 2020 3:45 AM IST (Updated: 18 Sept 2020 12:06 AM IST)
t-max-icont-min-icon

மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் தூத்துக்குடி கடற்கரை வெறிச்சோடியது. அங்கு பாதுகாப்பு பணிகளை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாளில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள முக்கிய படித்துறைகளிலும், கடற்கரையிலும் பொதுமக்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இதனால் தூத்துக்குடி துறைமு கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுப்பார்கள்.

இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன.

இதனால் மகாளய அமாவாசை நாளில் பொதுமக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரையில் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தனர். மேலும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதன்படி மாவட்டம் முழுவதும் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலையில் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்தார். அங்கு தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசார் பயன்படுத்தும் அனைத்து நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய ‘ஆல்டெரைன்‘ வாகனத்தில் சென்று கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story