மாவட்ட செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா + "||" + Prime Minister Narendra Modi Birthday party

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை,

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது. இதில் பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.


நெல்லை கோர்ட்டு முன்பு பா.ஜ.க. வக்கீல் பிரிவு சார்பில் பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பல்வேறு கிராமங்களிலும் பா.ஜ.க.வினர் கட்சி கொடியேற்றினர். மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துகுமார், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில், கரியமாணிக்க பெருமாள் கோவில், அடைக்கல விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. டவுன் பகுதியில் பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு, கட்சி கொடியேற்றப்பட்டது.

நெல்லை டவுனில் தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜனதாவினர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் அவர்களுக்கு பழங்களை வழங்கினர். வக்கீல் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, இளைஞரணி மாநில துணை தலைவர் வேல் ஆறுமுகம், நிர்வாகிகள் மூர்த்தி, சீதா குற்றாலிங்கம், நடராஜன், சங்கர், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில், பாளையங்கோட்டை பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பேட்டை பகுதியில் பா.ஜ.க. மண்டல தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அம்பை உச்சிமாகாளி அம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்பை வனத்துறை அலுவலகம் முன்பு, பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரில், ஆர்.எஸ். பஸ் நிறுத்தம் அருகில் போன்ற பகுதிகளில் பா.ஜ.க. கொடியேற்றப்பட்டது. சோழபுரம் பகுதியில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு அரிசி, உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பால்பாண்டியன், அரசாங்க தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் சேகர் பண்டியன், நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிராம், நகர துணை தலைவர் தங்கம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இட்டமொழியில் பா.ஜ.க. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தலைவர் தளவாய் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஒன்றிய பார்வையாளர் பாலாஜி, ஒன்றிய துணை தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் பட்டுராஜ், கிளை தலைவர் முருகேசன், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விஜய அச்சம்பாடு, ராஜகோபாலபுரம், இட்டமொழி புதூர் ஆகிய ஊர்களிலும் பா.ஜ.க. கொடியேற்றப்பட்டது.

ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் திசையன்விளை அருகே விஜயாபதி விசுவாமித்திரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 70 இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. மாவட்ட துணை தலைவர் பால்சாமி, ஒன்றிய தலைவர் கேசவன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஒன்றிய துணை தலைவர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பா.ஜ.க. மாவட்ட வக்கீல் பிரிவு சார்பில், பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளா் கே.எஸ்.முத்து தலைமை தாங்கினார். மாவட்ட பட்டியல் அணி தலைவா் வக்கீல் பால்ராஜ் முன்னிலை வகித்தார். நகர துணை தலைவா் கோமதிநாயகம் வரவேற்று பேசினார்.

வெளிநாடுவாழ் பிரிவு வக்கீல் கணேசன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஒன்றிய வக்கீல் பிரிவு தலைவா் அரிச்சந்திரன், இந்து முன்னனி நகர பொதுச்செயலாளா் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
2. பிரதமர் நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலி நிகழ்ச்சியான 'மான் கி பாத்' மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
3. பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
தென்காசி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
4. பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.