திருச்சியில் பல்வேறு பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள், ஆட்டோ சக்கரங்கள் திருட்டு
திருச்சியில் ஆட்டோ சக்கரங்கள் மற்றும் 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டுபோனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டையை சேர்ந்தவர் தங்கையன் (வயது 42). இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து சவாரி சென்று வருகிறார். திருச்சி ஏர்போர்ட் பகுதிக்கு சவாரிக்கு சென்றவர், அங்குள்ள ராயல்பார்க் போர்டிகோ பகுதியில் ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, ஆட்டோவின் பின்பக்க 2 சக்கரங்களை யாரோ மர்ம ஆசாமி கழற்றி திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள்
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள வெள்ளை வெற்றிலைக்காரன் தெருவை சேர்ந்தவர் நாராயணன். இவர், தனது ரூ.40 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது, அது திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்குள் கீதாபுரம் அபார்ட்மெண்டில் வசிக்கும் தீபா (32), கொண்டையம்பட்டியை சேர்ந்த பழனிசாமி (54), மேலூரை சேர்ந்த வேல்முருகன் (30) ஆகியோரது மோட்டார் சைக்கிள்களை திருச்சி கே.கே.நகர் காந்திநகரை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழ க்குப்பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திருட்டு
கரூர் மாவட்டம், இனுங்கூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (22), ஸ்ரீரங்கம் அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த சரத்குமார் (25) ஆகியோர் உறவினர்களை பார்க்க மோட்டார் சைக்கிள்களில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர். புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story