கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு: மின்ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
கயத்தாறு அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவத்தில், மின்ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயத்தாறு,
கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முண்டசாமி என்பவருடைய மகன் பாலமுருகன் (வயது 27). இவர் சம்பவத்தன்று காலையில் தனது வீட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள அவரது சொந்த தோட்டத்தில் பம்புசெட் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கி பாலமுருகன் இறந்ததற்கு மின்வாரிய ஊழியர்கள் அலட்சியப்போக்கு தான் காரணம் என்று கூறியும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அங்கு திரண்டு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களை கலைந்து போகும்படி கூறினர்.
பின்னர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாசில்தார் பாஸ்கரன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில், மின்வாரிய உதவி பொறியாளர் ராஜேஸ்வரி, வருவாய் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story