கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்ட சோதனை நாளை தொடங்கும் சசூன் ஆஸ்பத்திரி டீன் தகவல்
கொரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டசோதனை நாளை(திங்கட்கிழமை) தொடங்கும் என சசூன் ஆஸ்பத்திரி டீன் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து ‘ கோவிஷீல்டை’ தயாரித்து வருகிறது.
இந்தநிலையில் இந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்திய சோதனையின் போது சிலருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி நடத்தப்பட்ட சோதனை நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே நாளை(திங்கட்கிழமை) கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் 3-ம் கட்ட சோதனை தொடங்கும் என புனே சசூன் ஆஸ்பத்திரி டீன் முரளிதர் தாம்பே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், ‘ கோவிஷீல்ட்‘ தடுப்பு மருந்தின் 3-வது கட்டசோதனை சசூன் ஆஸ்பத்திரியில் அடுத்த வாரம் தொடங்குகிறது. சில தன்னார்வலர்கள் சோதனைக்கு முன்வந்துள்ளனர். 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட உள்ளது. சனிக்கிழமை முதல் தன்னார்வலர்களை சேர்த்து வருகிறோம். மேலும் தடுப்பு மருந்து சோதனையில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

Related Tags :
Next Story