புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா...’ பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை,
தமிழ் மாதங்களிலேயே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். குறிப்பாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளை பக்தர்கள் விசேஷ நாட்களாக கருதுவார்கள்.
இந்த வருடம் புரட்டாசி மாதம் கடந்த 17-ந்தேதி பிறந்தது. புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமையான நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று முதல் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் என 3 மணி நேரம் தரிசனத்துக்காக நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பார்த்தசாரதி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டு சென்றனர். கோவிலில் நுழையும் முன்னர் பக்தர்கள் அனைவருக்கும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் நேற்று காலை 6 மணி முதலே பக்தர்கள் ஆர்வத்துடன் வந்தனர். கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் ஏழுமலையானை மனமுருக வேண்டி வணங்கி சென்றனர். லட்டு, சர்க்கரை பொங்கல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோவில் வளாகத்தில் நேற்று காலை கருட சேவை நடந்தது. சீனிவாச பெருமாள் புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாரிமுனை சென்னகேசவ பெருமாள் கோவில், புரசைவாக்கம் ஆதிகேசவ பெருமாள் கோவில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், முகப்பேர் சந்தான சீனிவாச பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோவில், பார்க்டவுன் பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... பக்தி முழக்கம் எழுப்பி பெருமாளை வழிபட்டு சென்றனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று உற்சவர் பவள வண்ண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் தாயாருக்கு பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட 25 கிலோ எடையுள்ள மனோரஞ்சிதம் பூக்கள், குருவிவேர் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story