இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்


இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணை கல்வி அதிகாரி வழங்கினார்
x
தினத்தந்தி 20 Sep 2020 2:38 AM GMT (Updated: 20 Sep 2020 2:38 AM GMT)

இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையை மாவட்ட கல்வி அதிகாரி ராமன் வழங்கினார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 25 பேர் என மொத்தம் 39 பேர் குமரியை தேர்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலருக்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். மற்றவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே முதன்மை கல்வி அதிகாரியால் வழங்கப்பட்டது. அதேபோல் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேருக்கு நேற்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் அவருடைய அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கினார்.

நாளை

வெளி மாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்தை தேர்வு செய்த 25 பேருக்கான பணி நியமன ஆணை, கல்வி அலுவலகம் மூலமாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. பணி நியமன ஆணை பெற்றவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) பணியில் சேர வேண்டும் என முதன்மைக்கல்வி அதிகாரி ராமன் கூறினார்.

Next Story