ஜெயங்கொண்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு-சாலை விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஜெயங்கொண்டத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஜெயங்கொண்டம்,
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் அறிவுறுத்தலின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான போலீசார் 4 ரோடு கடைவீதி, விருத்தாச்சலம் ரோடு, சிதம்பரம் ரோடு, கும்பகோணம் ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருபுறமும் இருசக்கர வாகனங்கள நிறுத்துவதற்கு என வெள்ளைகோடு வரைந்து, கயிறு அடிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வெள்ளைக்கோட்டில் கயிறு கட்டப்பட்ட பகுதிக்கு உள்ளேயே இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும், கடைக்காரர்களும் தங்கள் விளம்பர பதாகைகளை அவரவர் கடைகளுக்குள்ளேயே சொந்த இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும், வெளியில் சாலையில் வைக்கக்கூடாது என்றும், இலகுரக வாகனங்களை கடைவீதியில் நிறுத்த அனுமதி கிடையாது என்றும் வாகன ஓட்டிகளுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் முக கவசம், ஹெல்மெட் அணிந்து இருக்க வேண்டும், கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி செல்லக்கூடாது, பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு, கொரோனா தொற்று பரவல் தடுப்பு, விபத்து தடுப்பு பற்றிய விதிமுறைகளை கடைபிடிக்கவும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இன்று(திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Related Tags :
Next Story