டோம்பிவிலியில் கொரோனாவை வீழ்த்திய 106 வயது மூதாட்டி
டோம்பிவிலியில் 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவை வீழ்த்தி, அதில் இருந்து மீண்டு வந்து உள்ளார்.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக மும்பை பெருநகரம் மற்றும் புனேயில் அதிகளவில் பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் வயது வித்தியாசமின்றி பெரும்பாலானவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 106 வயது மூதாட்டி ஆனந்திபாய் பாட்டீல் கொரோனாவை வீழ்த்தி உள்ளார்.
மூதாட்டிக்கு சமீபத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் வயதை காரணம் காட்டி சில ஆஸ்பத்திரிகள் அவரை சிகிச்சைக்கு சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன் அவர், டோம்பிவிலி சாவ்லராம் கிரிதா சன்குல் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த மாநகராட்சி கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் மன உறுதியின் காரணமாக மூதாட்டி ஆனந்திபாய் பாட்டீல் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சை மையத்தில் இருந்து உற்சாகமாக வீடு திரும்பினார். சிகிச்சை மைய நிர்வாகத்தினரும் அவருக்கு அன்பான பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.
இது குறித்து மூதாட்டியின் மருமகள் கூறுகையில், “அவருக்கு உரிய சிகிச்சை அளித்து கொரோனா தொற்றை வீழ்த்த உதவிய சிகிச்சை மைய மருத்துவ குழுவினருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” என்றார். கொரோனா பாதிப்பில் இருந்து குணமான மூதாட்டிக்கு மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story