ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா


ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா
x
தினத்தந்தி 21 Sept 2020 6:46 AM IST (Updated: 21 Sept 2020 6:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம்,

அரியலூர் மாவட்டம் நந்தியன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரி (வயது 19). இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துசெல்வன் என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர்.

தர்ணா

இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். ஆனால் மகளிர் போலீசார் அவர்களை அரியலூர் மாவட்ட போலீசில் தஞ்சமடைய சொன்னார்கள். அரியலூருக்கு சென்றால் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி இருவரும் போலீஸ் நிலையம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story