குமாரபாளையம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து எலக்ட்ரீசியன் பலி 2 பேர் படுகாயம்
குமாரபாளையம் அருகே சரக்கு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
குமாரபாளையம்,
கோவை ராம் நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 70). இவர் அங்குள்ள ஒரு தனியார் மின் பழுது நீக்கும் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவருடன் கோவையை சேர்ந்த அமல்ராஜ் (35), மயிலாடுதுறையை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.
சேலத்தில் உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்வதற்காக இவர்கள் 3 பேரும் சரக்கு வாகனத்தில் அங்கு சென்றனர். பின்னர் நூற்பாலையில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்து விட்டு நேற்று அதிகாலை கோவைக்கு திரும்பினர். வாகனத்தை அமல்ராஜ் ஓட்டி சென்றார்.
கவிழ்ந்து விபத்து
இந்த வாகனம் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையம் அருகே உள்ள அருவங்காடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த முரளிதரன், அமல்ராஜ், ராஜ்குமார் ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.
இதில் முரளிதரன் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அமல்ராஜ், ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story