கர்நாடகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


கர்நாடகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்
x

கர்நாடகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குறிப்பாக உடுப்பி, தட்சிண கன்னட, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் உடுப்பியில் வரலாறு காணாத மழை பெய்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கிய மக்களை இயற்கை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடியவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மைசூரு, குடகு உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம், கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பெங்களூருவில் இன்று மழை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீதர், பெலகாவி, யாதகிரி, ஹாவேரி உள்ளிட்ட வட கர்நாடகத்திலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்றும் அந்த மையம் கூறியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Next Story