வடக்கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வெள்ள தடுப்பு குழு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு குழு உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பாதிப்படைய கூடிய கிராமங்களின் விவரங்களை ஆய்வு செய்திட வேண்டும். ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் கரை உடைப்பு ஏற்படும் பட்சத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெள்ள தடுப்பு பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்படும் மக்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
மழை, வெள்ள காலங்களில் மக்கள் தங்குவதற்கு முகாம் அமைக்க பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும். பாதிப்படைய கூடிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். பாதிப்படைய கூடிய பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை தயார் நிலையில் வைக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்துத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட நேர்முக உதவியாளர் (பொது) ராமசந்திரன், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியக்கோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story