கோரிமேடு வாய்க்கால் தூர்வாரும் பணி சபாநாயகர் சிவக்கொழுந்து ஆய்வு


கோரிமேடு வாய்க்கால் தூர்வாரும் பணி சபாநாயகர் சிவக்கொழுந்து ஆய்வு
x
தினத்தந்தி 23 Sept 2020 7:10 AM IST (Updated: 23 Sept 2020 7:10 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் நகர பகுதியில் உள்ள 16 பெரிய வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் மூலம் நகர பகுதியில் உள்ள 16 பெரிய வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை சட்டமன்ற தொகுதி ஜீவானந்தபுரத்தில் உள்ள கோரிமேடு பெரிய வாய்க்கால் தூர்வாரும் பணியை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான சிவக்கொழுந்து பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story