மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2020 7:26 AM IST (Updated: 23 Sept 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி சாரம் அவ்வை திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

ஏழை, எளிய குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரணமாக தலா ரூ.7,500 வழங்கவேண்டும், தனிநபருக்கு 6 மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் உணவு தானியங்கள் வழங்கவேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை நகரப்பகுதிக்கும் விரிவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சாரம் அவ்வை திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். போராட்டத்தை பிரதேச குழு உறுப்பினர் முருகன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், பிரபுராஜ், இடைகுழு செயலாளர்கள் மதிவாணன், அன்புமணி, பிரதேச குழு உறுப்பினர்கள் சரவணன், கலியமூர்த்தி, சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் பாகூரை அடுத்த சோரியாங்குப்பத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொம்யூன் கமிட்டி உறுப்பினர் முத்துலிங்கம் தலைமை தாங்கினார். பாகூர் - நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் செல்வராசு, பாகூர் கல்கி, விஜயன், வேலாயுதம், சக்திவேலு, தனபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Next Story