டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நெல்லை,
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் சண்முகவேல், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் வெங்கடேசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட தலைவர் குருசாமி, வடக்கு மாவட்ட தலைவர் பெரியசாமி, தேனி மாவட்ட செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயல் தலைவர் பழனிபாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மதுபான கடைகளில் முறையற்ற ஆய்வுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் ஆய்வு செய்யும் முறையினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் முன்னாள் பொதுச் செயலாளர் கணேசன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story