நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிரம்பும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 494 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.53 அடியாக உயர்ந்தது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால், அணை விரைவில் நிரம்பிவிடும். இதனால் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றில் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
எனவே பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், பெரியகொடிவேரி, நஞ்சைபுளியம்பட்டி, அடசபாளையம், அத்தாணி சவுண்டப்பூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல், சென்னிமலைகவுண்டன்புதூர், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரிபுதூர், தளவாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தண்டோரா மூலம் விடப்பட்டு உள்ளது.
எனவே பொதுமக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது எனவும், ஆற்றங்கரையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு பாதுகாப்பாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் செல்லும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story