பிரதமரின் நிதி உதவி திட்டம்: கிருஷ்ணகிரியில் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை


பிரதமரின் நிதி உதவி திட்டம்: கிருஷ்ணகிரியில் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Sep 2020 10:15 PM GMT (Updated: 23 Sep 2020 10:03 PM GMT)

பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் கிருஷ்ணகிரியில் முறைகேட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கிகள் மூலமாக தொகையை மீட்டெடுத்து வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்த தொகை அரசு கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 97 தகுதியற்ற பயனாளிகளில் நேற்று வரையில் 4 ஆயிரத்து 972 பயனாளகளிடம் இருந்து ரூ.1 கோடியே 87 லட்சத்து 45 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 3,125 பயனாகளிடம் இருந்து உரிய தொகையை வருவாய், வேளாண்மை, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலமாக வசூலித்து அரசு கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் மற்றும் அவர்களை தவறுதலாக சேர்த்த கணினி மையங்களின் உரிமையாளர்கள், சம்பந்தபட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.சி.ஐ.டி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இந்த முறைகேடு தொடர்பாக 51 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story