போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்: ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே உள்பட 4 நடிகைகளுக்கு திடீர் ‘சம்மன்’ விசாரணைக்கு ஆஜராக உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பமாக பிரபல நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு திடீரென்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மும்பை,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தனது மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று கூறி, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு இருப்பதாகவும் புகாரில் அவர் கூறி இரு௴ந்தார்.
இதையடுத்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்ரவர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுஷாந்த் சிங் தற்கொலையை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரிக்க தொடங்கினர்.
இந்த விசாரணையில் நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்குக்காக அவர் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் கடந்த 8-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
முன்னதாக ரியா சக்ரவர்த்தியின் தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் கடந்த 2 நாட்களுக்கு முன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்திப்பட தயாரிப்பாளர் மது மந்தேனாவிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.
இதுவரை கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டவர்கள், போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகைகள் சிலரின் பெயரை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகைகள் ரகுல்பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் உள்ளிட்டோரின் பெயர்கள் இதில் அடிபட்டன. தேவைப்பட்டால் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நேற்று அதிரடி திருப்பம் ஏற்பட்டது.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் திடீரென்று சம்மன் அனுப்பினர்.
ரகுல்பிரீத் சிங்குக்கு அனுப்பப்பட்ட சம்மனில் விசாரணைக்காக இன்று (வியாழக்கிழமை) ஆஜராகுமாறு கூறப்பட்டு உள்ளது. தீபிகா படுகோனேக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறும், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு சனிக்கிழமை ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாசுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்த நிலையில் உடல்நல குறைவை காரணம் காட்டி அவர் தாமதமாக ஆஜராவதாக கூறி இருந்தார். அவர் ஆஜராக வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் தீபிகா படுகோனேயும், அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாசும் நாளை ஒரேநாளில் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.
கரிஷ்மா பிரகாஷ் போதைப்பொருள் தொடர்பான ‘வாட்ஸ் அப்’ உரையாடலில் ‘டி’ என்று குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ‘டி’ என்பது தீபிகா படுகோனே என்று கருதப்படும் நிலையில், அந்த நபர் யார் என்பதை உறுதிப்படுத்த வேண்டி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்மன் அனுப்பப்பட்ட நடிகை ரகுல்பிரீத் சிங் கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ ஆகிய படங்களிலும், சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ படத்திலும், அருண் விஜய்யுடன் ‘தடையற தாக்க’ படத்திலும் மற்றும் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் நடித்து உள்ளார். இது தவிர கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்திலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்திலும் நடித்து வருகிறார்.
இது தவிர இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார்.
ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ள தீபிகா படுகோனே ரஜினிகாந்தின் ‘கோச்சடையான்’ படத்தில் நடித்து இருக்கிறார். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவர் பிரபலமானார்.
சாரா அலிகான் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் விவகாரத்தில் முக்கிய நடிகைகள் விசாரணைக்கு ஆஜராக இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சிலரின் பெயர்கள் வெளிவரலாம் என கருதப்படுவதால், திரையுலகம் கலக்கம் அடைந்து உள்ளது.

Related Tags :
Next Story