பண மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கைகோரி மனு
கரூர், திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மனு ஒன்றை கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று கரூர், திருச்சி, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையை தலைமையிடமாக கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்தது. அந்த நிதி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் 10 மாதங்களில் டெபாசிட் செய்த தொகையை விட 2 மடங்கு இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தையை எங்களிடம் கூறினர். பின்னர் எங்களிடம் இருந்து பல லட்சங்கள் பணத்தை பெற்றனர். ஆனால் அந்த நிறுவனம் சொன்னபடி எந்த தொகையையும் எங்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். இதேபோல் எங்களை போன்று இன்னும் பலரிடம் பணத்தை பெற்று பல கோடி மோசடி செய்து உள்ளனர். எனவே பணத்தை பெற்று ஏமாற்றி மோசடி செய்த நிதி நிறுவனத்திடம் இருந்து எங்கள் பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

Related Tags :
Next Story