மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ராக்கி முருகேசன் தலைமை தாங்கினார். இதில் அருள், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2021 சமூக, பொருளாதார கணக்கெடுப்பில் ஓபிசி பிரிவை சேர்க்க வேண்டும். மருத்துவ படிப்பில் உடனடியாக 50 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். 2011-ல் நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிட வேண்டும். ஓபிசி இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேகோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மணி, சுரேஷ், பூவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Related Tags :
Next Story