அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்


அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 24 Sept 2020 9:32 AM IST (Updated: 24 Sept 2020 9:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி சிறார் மருத்துவக்குழு சார்பில், வீரபாண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

தேனி,

பள்ளி சிறார் மருத்துவக்குழு சார்பில், வீரபாண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான இதய பரிசோதனை சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்து பார்வையிட்டார். முகாமில் 44 குழந்தைகள் கலந்துகொண்டனர். அவர்களில் 24 பேருக்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. பள்ளி சிறார் மருத்துவ குழு சார்பில் இந்த குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதேபோல், 20 பேருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. முகாமில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story