கட்டிட விபத்துகள் குறித்து அனைத்து மாநகராட்சிகளும் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பிவண்டி கட்டிட விபத்து தீவிரமானது என்று குறிப்பிட்ட மும்பை ஐகோர்ட்டு, கட்டிட விபத்துகள் குறித்து அனைத்து மாநகராட்சிகளும் பதிலளிக்க உத்தரவிட்டது.
மும்பை,
தானே அருகே உள்ள பிவண்டியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டிட விபத்து தொடர்கதையாகி விட்ட நிலையில், பிவண்டி கட்டிட விபத்து குறித்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா தாமாக முன்வந்து நேற்று விசாரணை நடத்தினார்.
அப்போது சுமார் 40 பேரை பலி கொண்ட பிவண்டி கட்டிட விபத்து, தீவிர பிரச்சினைக்குரிய விஷயம் என்றும், இதில் மும்பை நிலைமை மோசமாக உள்ளது என்றும் தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் மும்பை, தானே, கல்யாண்-டோம்விவிலி, நவிமும்பை மாநகராட்சிகளையும் பிரதிவாதியாக சேர்த்தார்.
கட்டிட விபத்துகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மராட்டிய அரசு மற்றும் அனைத்து மாநகராட்சிகளும் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ஆசுதோஸ் கும்பகர்னிக்கு உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், கட்டிட விபத்துகளை தடுக்க மாநிலம் முழுவதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?, எதிர்காலத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்று விளக்கம் அளிக்கப்படும் என்றார். இதை யடுத்து வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா ஒத்திவைத்தார்.
இதற்கிடையே பிவண்டி கட்டிட விபத்தில் மீட்பு பணி நிறைவு பெற்றதாக நேற்று பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர்.
பிவண்டி கட்டிட விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 6 பேர் பலி
மும்பை, தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஜிலானி என்ற 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதில் 39 பேர் பலியானார்கள். மேலும் 25 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். இதில் பலியானவர்களில் 6 பேர் ஒரே கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் என தெரியவந்தது. இதுகுறித்து லாத்தூர் மாவட்டம் ஹாலி கிராமத்தை சேர்ந்த பாபுலால் என்பவர் கூறியதாவது:-
எங்களது கிராமத்தை சேர்ந்த ஆரிப் சேக் (வயது 32) தனது மனைவி, 3 குழந்தைகளுடன் கடந்த 6 மாதத்திற்கு முன் பிவண்டிக்கு பிழைப்பு தேடி சென்றார். கடந்த மாதம் அவர் கிராமத்தில் உள்ள தனது சகோதரரையும் வேலைக்காக அங்கு அழைத்து இருந்தார். 6 பேரும் ஜிலானி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கட்டிட விபத்தில் சிக்கி அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இது எங்களது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story