சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்


சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்த பா.ஜ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2020 4:28 AM IST (Updated: 25 Sept 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

தாமரைக்குளம்,

அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் கோகுல் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் முன்னாள் தலைவர் நடராஜன், நகர தலைவர் வைரவேல், நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பா.ஜ.க. நிர்வாகிகளில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அமர்ந்திருந்தனர். மேலும் கூட்டமானது ஏ.சி. அறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழ்நிலையில், பா.ஜ.க.வினரே விதிமுறைகளை பின்பற்றாதது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story