வேளாண் மசோதாவை கண்டித்து பள்ளப்பட்டியில், சட்ட நகலை கிழித்து போராட்டம்


வேளாண் மசோதாவை கண்டித்து பள்ளப்பட்டியில், சட்ட நகலை கிழித்து போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2020 7:31 AM IST (Updated: 25 Sept 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

அரவக்குறிச்சி,

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எறியும் போராட்டம் நேற்று நடைபெற்றது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி ஷா நகரில், நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சாதிக் தலைமை தாங்கினார். இதில், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Next Story