ஆத்தூரில் பயங்கரம்: காதல் மனைவி கழுத்தை நெரித்துக் கொலை - நடத்தையில் சந்தேகத்தால் தொழிலாளி வெறிச்செயல்
ஆத்தூரில் நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கூலிதொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வள்ளிவிளையைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சரவணன் (வயது 35). இவர் சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவரும், ஆழ்வார்திருநகரி அருகே மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த ரம்யாவும் (21) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு சிவபார்வதி (4½) என்ற மகளும், கணேஷ் (2½) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, சரவணன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் அவர்கள், தெற்கு ஆத்தூர் நாடார் தெருவில் வாடகை வீட்டில் வசித்தனர். சரவணன் கூலிதொழிலுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சரவணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். மேலும் அவர் மனைவியின் நடத்தையிலும் சந்தேகப்பட்டு, அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் குழந்தைகளுடன் தூங்கினர். தொடர்ந்து அதிகாலையிலும் சரவணனுக்கும், ரம்யாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன், மனைவி ரம்யா அணிந்து இருந்த சேலையாலே அவரது கழுத்தை இறுக்கி நெரித்தார். பின்னர் அவரை இழுத்து சென்று, வீட்டின் பின்பக்கத்தில் தண்ணீர் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் வாளிக்குள் அவரது தலையை அமுக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறிய ரம்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சரவணன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதற்கிடையே குழந்தைகளின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ரம்யா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். ஆத்தூரில் நடத்தையில் சந்தேகத்தால் காதல் மனைவியை தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story