2-வது புரட்டாசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
2-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நெல்லை,
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைக்கு தனித்துவமும், மகத்துவமும் உள்ளது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து தூய ஆடை உடுத்தி அருகில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். என்றாலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருடசேவை நடைபெறும்.
நெல்லை அருகே உள்ள மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
கொரோனா பரவல் காரணமாக இரவில் கருடசேவை நடைபெறவில்லை. இருப்பினும் கோவிலில் கருடன் மீது பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதேபோல் திருவேங்கடநாதபுரத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று காலையில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லை சந்திப்பு, டவுனில் இருந்து மேலதிருவேங்கடநாதபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு எட்டெழுத்து பெருமாள், ஆதிசிவன், சிவசுப்பிரமணியர், பெரியபிராட்டி அம்மன், இளையபெருமாள், ஆத்தியப்பர், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன், மாயாண்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
இரவு 7 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எட்டெழுத்து பெருமாளும், ஆதி சிவனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பாளையங்கோட்டை வேதநாராயணன், அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும், இரவில் கருட வாகனத்தில் பெருமாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர்கோவில், சீவலப்பேரி அழகர் கோவில், சேரன்மாதேவி அப்பன் வெங்கடாஜலபதி கோவில், நெல்லை திருப்பதி வெங்கடாஜலபதி, நெல்லை கொக்கிரகுளம் நவநீத கிருஷ்ண சுவாமி ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடும், இரவில் கருட சேவையும் நடந்தது.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நவதிருப்பதி பெருமாள் கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.

Related Tags :
Next Story