வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வங்கி தேர்வுக்கான இணையவழி பயிற்சி வகுப்பு 28-ந் தேதி தொடங்குகிறது


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வங்கி தேர்வுக்கான இணையவழி பயிற்சி வகுப்பு 28-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 27 Sept 2020 6:13 PM IST (Updated: 27 Sept 2020 6:13 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடக்கும் வங்கி தேர்வுக்கான இணையவழி பயிற்சி வகுப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் வழியாக மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களால் அறிவிக்கப்படும் போட்டி தேர்வுகளுக்கு இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

தற்சமயம் மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள கொரோனா ஊரடங்கு நிகழ்வினால் தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்கள் தங்களது இருப்பிடத்திலேயே பயிற்சி பெற இணையவழி மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளில் 2,500-க்கும் அதிகமான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இலவச இணையவழி பயிற்சி வகுப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பயிற்சி வகுப்பில் இணையவழி கற்பித்தலோடு ஆன்லைன் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெயர், முகவரி, வாட்ஸ்அப் எண் மற்றும் கல்வித்தகுதியை குறிப்பிட்டு study-c-i-r-c-l-et-nj@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story