தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொருளாளர் சுசிலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதேபோன்று அரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் தமிழ்செல்வி, வட்ட செயலாளர் வேடியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Tags :
Next Story