ராசிபுரத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


ராசிபுரத்தில் வேளாண் மசோதாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2020 9:08 PM IST (Updated: 27 Sept 2020 9:08 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரியும், அதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராசிபுரம்,

ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெறக்கோரியும், அதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் ராசிபுரம் நகர செயலாளர் பிடல் சேகுவேரா தலைமை தாங்கினார். நகர தலைவர் அன்பரசன் வரவேற்றார். ஆதி தமிழர் பேரவையின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ராசிபுரம் நகர செயலாளர் மணிமாறன், தமிழ் புலிகள் கட்சி சேலம் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பிரகாஷ், இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் ராசிபுரம் நகர அமைப்பாளர் பூபதி, திராவிடர் விடுதலை கழக நகர அமைப்பாளர் சுமதி மதிவதனி, ஆதி தமிழர் பேரவை மாநில இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் சுதா, தூய்மை தொழிலாளர் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, தமிழ் புலிகள் கட்சியின் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் சித்துராஜ் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். முடிவில் திராவிடர் விடுதலை கழகத்தின் மல்லசமுத்திரம் ஒன்றிய பொறுப்பாளர் பெரியண்ணன் நன்றி கூறினார்.

Next Story