நாகரஒலே வனப்பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து விளையாடிய புலிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


நாகரஒலே வனப்பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்து விளையாடிய புலிகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 28 Sept 2020 4:55 AM IST (Updated: 28 Sept 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

நாகரஒலே வனப்பகுதியில் உள்ள சாலையில் 2 புலிகள் சுற்றித்திரிந்து விளையாடின. அதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைசூரு,

மைசூரு மாவட்டம் நாகரஒலே வனப்பகுதிக்கு அரவிந்த் கார்த்திக் என்பவர் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது வனப்பகுதி சாலையில் 2 புலிகள் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து உலா வந்தன. பின்னர் அவைகள் சாலையிலேயே அங்கும், இங்குமாக ஓடி விளையாடின. புலிகள் விளையாடுவதை பார்த்த அரவிந்த் கார்த்திக், அதை தனது கேமராவில் வீடியோ எடுத்தார். பின்னர் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுபற்றி வனத்துறையினர் கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கால் நாகரஒலே வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் சபாரி அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவ்வாறு சபாரி அழைத்து செல்லப்பட்டவர்களில் அரவிந்த் கார்த்திக் என்பவரும் ஒருவர். அவருடைய கேமராவில் புலிகள் விளையாடிய காட்சி பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story