பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர்களை கண்டித்து தி.க.-தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
திருச்சியில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர்களை கண்டித்து திருவாரூரில் தி.க.-தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு மர்மநபர்கள் காவி சாயம் பூசி உள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் பழைய பஸ் நிலையம் ரவுண்டானா பெரியார் சிலை அருகில் தி.க.-தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.க. மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜமணிகண்டன் தலைமை தாங்கினார்.
இதில் தி.மு.க. நகர செயலாளர் பிரகாஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், தி.க. பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், பகுத்தறிவு கழக தலைவர் சிவக்குமார், மகளிரணி செயலாளர் செந்தமிழ்செல்வி, நகர அமைப்பாளர் துரைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோஷங்கள்
அப்போது பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் காவி சாயம் பூசி, சிலை பீடத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story