வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2020 2:27 AM GMT (Updated: 28 Sep 2020 2:27 AM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேதுபாவாசத்திரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வேளாண் சட்ட மசோதாக்களை ரத்து செய்யக்கோரியும், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் மாநில அரசை கண்டித்தும் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்

போராட்டத்திற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் கமால்பாட்சா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட உயர் மட்ட குழு உறுப்பினர் மல்லிப்பட்டினம் அப்துல்ஜப்பார், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இபுறாகிம்ஷா, பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் நூருல் அமீன், மாநில மீனவர் காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வடுகநாதன் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story