பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது


பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய் இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2020 8:12 AM IST (Updated: 28 Sept 2020 8:12 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர தாய், இன்ஸ்பெக்டரின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பத்மநாபபுரம்,

குமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு அடிக்கடி வெளியாட்கள் வந்து சென்றதாக தெரிகிறது. இரவு நேரத்திலும் ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் ரகசியமாக அந்த வீட்டை கண்காணித்தனர். அப்போது அந்த வாடகை வீட்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசந்திரன் தலைமையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

5 பெண்கள்

அப்போது அந்த வீட்டில் ஒரு அறையில் சிறுமியும், ஒரு ஆணும் அறைகுறை ஆடையுடன் இருந்தனர். வேறு ஒரு அறையிலும் மற்றொரு சிறுமி இன்னொரு ஆணுடன் அறைகுறை ஆடையுடன் இருந்துள்ளார். போலீசாரை பார்த்ததும் 2 சிறுமிகளுடன் இருந்த ஆண்கள் அரை நிர்வாணத்துடன் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

2 சிறுமிகள், வீட்டில் மற்றொரு அறையில் இருந்த லதா (வயது 36) என்ற பெண்ணையும், மேலும் 2 சிறுமிகள் என மொத்தம் 5 பேரை போலீசார் பிடித்தனர்.

இன்ஸ்பெக்டரின் கணவர்

பிடிபட்ட ஆண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் குளச்சல் வெள்ளங்கட்டியை சேர்ந்த ராஜ்மோகன் (வயது 47), குழித்துறையை சேர்ந்த சுனில்குமார் (42) என்பது தெரியவந்தது. இதில் ராஜ்மோகனின் மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவார். அவர் நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது பெற்ற மகள்களை தாயாரே விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூர சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

பெற்ற மகள்கள்

போலீசாரிடம் சிக்கிய லதா என்ற பெண் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவருடைய மூத்த மகளுக்கு 18 வயது ஆகிறது. கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் 12-ம் வகுப்பும், 3-வது மகள் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 3-வது மகளின் தோழியும் ஒருவர் ஆவார்.

புத்தகத்தை தூக்கிக் கொண்டு கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய மகள்களுக்கு அவர்களின் தாயார் ஆசை வார்த்தைகள் கூறியும், கட்டாயப்படுத்தியும் விபசாரத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். இதைத் தொடர்ந்து மாணவிகள் 4 பேரையும் போலீசார் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

பரபரப்பு

லதா, ராஜ்மோகன், சுனில்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய மேட்டுக்கடையை சேர்ந்த பாபு, செல்வகுமார் ஆகிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திற்பரப்பில் நேற்று முன்தினம் விபசார கும்பல் சிக்கியது. இதற்கிடையே 2-வது நாளாக தக்கலை பகுதியில் மேலும் ஒரு விபசார கும்பல் சிக்கி உள்ள சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story