சாலை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார்: சதுப்பு நிலப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


சாலை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார்: சதுப்பு நிலப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Sept 2020 10:25 AM IST (Updated: 28 Sept 2020 10:25 AM IST)
t-max-icont-min-icon

சாலை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்படும் சதுப்பு நிலப்பகுதியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

நான் விவசாயி. பூதமங்கலத்துக்கு உட்பட்டது பொன்னாச்சிகுளம் நீர்நிலை. இந்த குளத்தில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் ஏராளமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தை நம்பி தான், நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது. இந்த பகுதி சதுப்பு நிலப்பகுதியாகும். தற்போது பொன்னாச்சிகுளம் நீர் ஆதார பகுதியில் செம்மண் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையினால் பொன்னாச்சிகுளத்தில் தண்ணீர் சேகரிப்பது தடைபட்டு உள்ளது.

இதன் காரணமாக இந்த பகுதியில் விவசாயம் தடைபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சதுப்பு நிலங்களும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சதுப்பு நிலத்தை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கடந்த 12.8.2020 அன்று அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆய்வு செய்ய வேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், மனுதாரர் கோரிக்கை குறித்து, பெரியாறு பிரதான கால்வாய் மேலூர் கோட்ட செயற்பொறியாளர், மேலூர் தாசில்தார், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் இணைந்து பொன்னாச்சிகுளம் பகுதியில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து 10 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story