கிரிக்கெட் மட்டையால் தாக்கி ஆட்டோ டிரைவர் கொலை போலீசில் தந்தை-மகன் சரண்
கிரிக்கெட் மட்டையால் தாக்கி ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை-மகன் இருவரும் போலீசில் சரண் அடைந்தனர்.
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகர் 6-வது தெருவில் வசித்து வந்தவர் வடிவேல் என்ற அப்புன்ராஜ் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவருக்கு தேவி, சரண்யா, சந்தியா என 3 மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனர். 3 மனைவிகளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் முதல் மனைவி தேவி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மற்ற 2 மனைவிகளான சரண்யா, சந்தியா இருவரும் சேர்ந்து கருத்து வேறுபாட்டால் அப்புன்ராஜிடம் தகராறு செய்தனர்.
தனது மனைவிகள் இருவரும் தன்னிடம் சண்டைபோடுவதற்கு பக்கத்து வீட்டுக்காரர் வேலுச்சாமி (82) மற்றும் அவருடைய மகன் ரவீஸ்வரன் (54) ஆகியோர்தான் காரணம் என்று கருதிய அப்புன்ராஜ், நேற்று மாலை இது தொடர்பாக தந்தை-மகன் இருவரிடமும் தகராறு செய்தார்.
அப்போது 3 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 3 பேருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த அப்புன்ராஜ், அருகில் இருந்த கிரிக்கெட் மட்டையால் ரவீஸ்வரன், வேலுச்சாமி இருவரையும் தாக்கினார். உடனே அவர்கள், அப்புன்ராஜிடம் இருந்த கிரிக்கெட் மட்டையை பறித்து அப்புன்ராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அப்புன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து வேலுச்சாமி, ரவீஸ்வரன் இருவரும் எம்.கே.பி. நகர் போலீசில் சரணடைந்தனர். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையான அப்புன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரண் அடைந்த தந்தை-மகன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலையான அப்புன்ராஜ் மீது வடபழனி போலீஸ் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story