மும்பையில் கே.இ.எம்., நாயர் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை
மும்பையில் கே.இ.எம்., நாயர் ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெற உள்ளது.
மும்பை,
ஆட்கொல்லி கொரோனா வைரஸ் உலகையே புரட்டு போட்டு உள்ளது. எனவே கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட்டு பல்கலைகழகத்துடன் இணைந்து புனேயில் உள்ள சீரம் நிறுவனமும் ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
அந்த மருந்து சோதனைக்காக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.
இதில் மும்பையில் உள்ள நாயா் மற்றும் கே.இ.எம். ஆஸ்பத்திரியில் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்காக மனிதர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதில் நாயர் ஆஸ்பத்திரியில் 100 தன்னார்வலர்களுக்கும், கே.இ.எம். ஆஸ்பத்திரியில் 150 பேருக்கும் தடுப்பு மருந்து சோதனைக்காக செலுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து நாயர் ஆஸ்பத்திரி டீன் ரமேஷ் பார்மல் கூறியதாவது:-
இதுவரை சுமார் 50 பேர் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த பெயரை பதிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர்., ஆன்டிபாடி சோதனைகள் செய்யப்பட்டது. இதில் 19 பேர் தகுதிவாய்ந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதலில் 4 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கே.இ.எம். ஆஸ்பத்திரியிலும் முதல்கட்டமாக 4 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.

Related Tags :
Next Story