மேல்-சபையில் 4 காலி இடங்களுக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் கர்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக மேற்கு பட்டதாரி தொகுதி, கர்நாடக வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, பெங்களூரு ஆசிரியர் தொகுதி என மொத்தம் 4 தொகுதிகள் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி முதல் காலியாக உள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் அந்த 4 தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 28-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 8-ந் தேதி கடைசி நாள். 9-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது.
ஓட்டுப்பதிவு
மனுக்களை வாபஸ் பெற 12-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஓட்டுப்பதிவு வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story