நிலுவை சம்பளம் வழங்கக்கோரி அமுதசுரபி ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்


நிலுவை சம்பளம் வழங்கக்கோரி அமுதசுரபி ஊழியர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2020 4:42 AM IST (Updated: 30 Sept 2020 4:42 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (அமுதசுரபி) அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி வீதியில் உள்ள அமுத சுரபி தலைமை அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (அமுதசுரபி) அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி வீதியில் உள்ள அமுத சுரபி தலைமை அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த ஊழியர் சங்க தலைவர் சிவஞானம் தலைமை தாங்கினார். இதில் குமரன், அய்யனாரப்பன், தணிகை மலை உள்பட பலர் கலந்து கொண்டனர். அமுதசுரபி நிறுவனத்திற்கு அரசின் பல்வேறு துறைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.9 கோடியை உடனடியாக பெற்றுத் தர வேண்டும். நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். இ.பி.எப்., இ.எஸ்.ஐ. தொகையை ஊழியர்களிடம் பிடித்தம் செய்ததை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story