4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை


4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2020 4:54 AM IST (Updated: 30 Sept 2020 4:54 AM IST)
t-max-icont-min-icon

தனியாருக்கு சொந்தமாக கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு வந்த பொழிச்சலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான எல்லப்பன் (வயது 33) என்பவர் அவரது நண்பரை பார்க்க செல்வதாக காவலாளியிடம் கூறி கட்டிடத்தின் உள்ளே சென்றார்.

சிறிது நேரத்தில் கட்டிடத்தின் பின்புறத்தில் இருந்து, பலமான சத்தம் கேட்டது. காவலாளி சென்று பார்த்தபோது, எல்லப்பன் இறந்து கிடந்தார். இது குறித்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிட்லபாக்கம் போலீசார், கண்காணிப்பு கேமராகாட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கட்டடத்தின் 4-வது மாடியில் இருந்து எல்லப்பன் கீழே குதித்து தற்கொலை செய்வது தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Next Story