ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை யாரும் பறிக்க முடியாது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை யாரும் பறிக்க முடியாது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 30 Sept 2020 4:58 AM IST (Updated: 30 Sept 2020 4:58 AM IST)
t-max-icont-min-icon

ஜிப்மரில் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை யாரும் பறிக்க முடியாது. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

ஜிப்மர் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையை பொறுத்தவரை விதிமுறைக்குட்பட்டு செயல்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவையில் 150 இடங் களும் காரைக்காலில் 50 இடங்களும் என மொத்தம் 200 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வந்தது.

தற்போது மத்திய மருத்துவ கழகம் தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் தேவையில்லாமல் சில விஷமிகள் தவறான கருத்துக்களை பரப்பி புதுவை மக்களை குழப்பு கின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம்.

ஜிப்மர் சட்டத்தின்படி புதுவையில் 40 இடங்களும், காரைக்காலில் 14 இடங்களும் என மொத்தம் 54 இடங்கள் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். இதை யாரும் பறித்து விட முடியாது. தேவையில்லாமல் வதந்திகளை சமூக வலைதளத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

டெபாசிட் வாங்காத கட்சி

புதுவை மாநில பா.ஜ.க. வினர் மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். மின்சார கட்டண ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு. புதுவை மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு குறைந்த விலை இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால் அதை அவர் கள் கேட்பது இல்லை. இந்த ஆணையத்தை அமைத்தவர்கள் பா.ஜ.க. வினர் தான். புதுவை மாநில பா.ஜ.க.வினர் அந்த ஆணையத்தை எதிர்த்து தான் போராட்டம் நடத்த வேண்டும். எனவே மாநில நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்த அவர்களுக்கு தகுதியோ, அருகதையோ கிடையாது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புதுவையில் டெபாசிட் வாங்காத கட்சி பா.ஜ.க., தற்போது எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துகிறது. மின் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசுதான். எனவே அவர்கள் மத்திய அரசை எதிர்த்து தான் போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story