நடத்தை சரியில்லாததால் ஆத்திரம்: மனைவியின் கழுத்தை அறுத்த ஆட்டோ டிரைவர் கைது


நடத்தை சரியில்லாததால் ஆத்திரம்: மனைவியின் கழுத்தை அறுத்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 29 Sep 2020 11:46 PM GMT (Updated: 29 Sep 2020 11:46 PM GMT)

செங்குன்றம் அருகே நடத்தை சரியில்லாத காரணத்தால் மனைவியின் கழுத்தை அறுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம்,

புழல் ஏரிக்கரையோரம் ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, செங்குன்றம் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் கழுத்தறுக்கப்பட்ட பெண் யார்? அவரது கழுத்தை அறுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரத்த வெள்ளத்தில் கிடந்தவர், செங்குன்றம் பொதுப்பணித்துறை அலுவலக தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 32), என்ற ஆட்டோ டிரைவரின் மனைவி சுகன்யா (26) என தெரிய வந்தது. தம்பதிகளுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலை திடீரென மாயமான சுகன்யாவை முருகன் தேடி அலைந்த நிலையில், எடப்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு ஒருவருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சுகன்யாவிடம் நமது குழந்தைகள் எதிர்காலம் கருதி தன்னுடன் சேர்ந்து வாழவருமாறு கூறி சமாதானப்படுத்தி ஆட்டோவில் அழைத்து வந்தார்.

அதன் பின்னர், செங்குன்றம் பொத்தூர் சாலை பம்மதுகுளம் அருகே ஆட்டோவில் வந்த போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுகன்யாவின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் முருகனை கைது செய்தார்.

Next Story