தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி


தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய சப்பர பவனி
x
தினத்தந்தி 30 Sept 2020 5:55 AM IST (Updated: 30 Sept 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா சப்பர பவனி நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தன. விழாவையொட்டி 8-ம் நாள் அன்று தருவைகுளம் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு மருத்துவ குணம் மிக்க மூலிகை கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பங்கு தந்தை எட்வர்டு ஜே ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். மன்ற அமைப்பாளர் லாரன்ஸ், தலைவர் அனிட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சப்பர பவனி

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடந்தது. நேற்று காலையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி நடந்தது. இந்த பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது.

நிகழ்ச்சியில் பங்கு தந்தை எட்வர்டு ஜே, உதவி பங்கு தந்தை ஜெயஅன்றோ சர்ச்சில் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.

தைலாபுரம் ஆலயம்

நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு தினமும் காலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

9-ம் நாள் திருவிழா அன்று மாலையில் நற்கருணை பவனி, திருவிழா மாலை ஆராதனை நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை செயலர் நார்பட் தாமஸ் தலைமை தாங்கினார். பிரகாசபுரம் பங்குதந்தை அந்தோணி இருதய தோமஸ் முன்னிலை வகித்தார். 10-ம் நாள் திருவிழா அன்று ஜெபமாலை, திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. வள்ளியூர் வட்டம் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை தாங்கினார். வள்ளியூா் வட்டம் குடும்ப நல்வாழ்வு பணிக்குழு செயலாளர் மரிய அரசு உரையாற்றினார். மதியம் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இரவில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடி இறக்கும் நடந்தது. ஏற்பாடுகளை பங்கு தந்தை இருதய ராஜா தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story