தலைவாசல் அருகே 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
தலைவாசல் அருகே 8-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தலைவாசல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா பச்சுடை யான் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் குமார், லாரி டிரைவர். இவருடைய ஒரே மகள் சுபிக்ஷா (வயது 13). இவள் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கொரோனா விடுமுறையை யொட்டி, தலைவாசல் அருகே சிறுவாச்சூர் அண்ணாநகரில் உள்ள அத்தை அஞ்சலை வீட்டில் மாணவி சுபிக்ஷா தங்கி இருந்தாள். இந்த நிலையில் மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மாணவி, கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.
பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவியை உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மாணவி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
இது குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமர வேல் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Related Tags :
Next Story